1940-ம் ஆண்டில் திரு. சுப்பராவ் ஆசிரியர் அவர்கள் தனியாக விளையாட்டு பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை செய்து வந்தார்.
1942-ம் ஆண்டுகளில் திரு. M. ஆறுமுகம் ஆசிரியர் அவர்கள் திரு. சுப்பராவ் அவர்களுக்கு, வால் பயிற்சி, பாக்சிங், ரிங்பார், பேர்லிபார் ,
ஜிம்னாஸ்டிக்ஸ், சிலம்பம், மல்யுத்தம், மற்றும் ஆன்மிகம் சம்பந்தமான போதனைகளையும் 3 ஆண்டுகாலமாக பயிற்சி அளித்துச் சென்றார்.
அதன் பிறகு 1946-ம் ஆண்டுகளில் தனக்கு பயிற்சி அளித்த M.ஆறுமுகம் அவர்களின் நினைவாக "M.ஆறுமுகம்தேகப்பயிற்சி சாலை" என்ற
ஸ்தாபனத்தை தொடங்கி அதன் சுற்று வட்டாரத்தில் இருந்த அனைவருக்கும் பயிற்சி அளித்து வந்தார்.
இதன் தொடர்ச்சியான ஜனவரி 3-ம் தேதி 2014 -ம் வருடம் குரு ஸ்ரீ சுப்பராவ் சுவாமிகளின் பாரம்பரிய தற்காப்பு கலைகள் மையம் என்ற
பெயரில் திரு. S. சௌந்தரராஜன் அவர்கள் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றார்.
தனக்கு பயிற்சி அளித்த ஆசிரியரின் பெயரில் புதிய ஸ்தாபனம் ஒன்றை M.
ஆறுமுகம் தேகப்பயிற்சி சாலை என்ற பெயரில் 1946-ல் தொடங்கி
கீழ்காணும் விளையாட்டுகளை பயிற்சி அளித்து வந்தார்.
வாள் பயிற்சி
பாக்சிங்
ரிங்பார்
பேர்லிபார்
ஜிம்னாஸ்டிக்
சிலம்பம்
மல்யுத்தம்
A. குழந்தைசாமி
சுப்பராவ் அவர்கள் சீடர்களில் ஒருவரான திரு. A. குழந்தைசாமி அவர்கள் தனது ஆசிரியர்
பெயரில் "பொன்னுசாமி நினைவு P.K. சுப்பராவ் தேகப்பயிற்சி சாலை" என்ற பெயரில் 1972-ல் கோவை - புலியகுளம்
பகுதியில் தொடங்கி இன்றளவும் சிறப்பாக நடத்தி வருகிறார்.
K. மணி
தனது குருவான சுப்பராவ் அவர்களின் மறைவிற்கு பிறகு அதே ஸ்தாபனத்தை தொடர்ச்சியாக 2014-ம்
ஆண்டு வரை நடத்தி வந்தார். தனது குருநாதர் அளித்து வந்த அனைத்து பயிற்சிகளையும்
மற்றும் ஆன்மீக போதனைகளையும் தனது குருநாதரின் வழியிலேயே தொடர்ச்சியாக செய்து வந்தார்.
அதன் தொடர்ச்சியாக கோவை-கண்ணம்பாளையம் பகுதியில் குரு ஸ்ரீ சுப்பராவ் சுவாமிகளின் சத்திய ஞான தரும சாலை என்ற பெயரில் புதிய ஸ்தாபனத்தை தொடங்குவதற்கான பணிகளை தற்போது செய்து வருகிறார்.
S. சௌந்தரராஜன்
2014-ம் ஆண்டு ஜனவரி 3-ம் நாள் முதல் M. ஆறுமுகம் தேகப்பயிற்சி சாலையானது
"குரு ஸ்ரீ சுப்பராவ் சுவாமிகளின் பாரம்பரிய தற்காப்பு கலைகள் மையம்" என்ற பெயரில் புதிய பொலிவுடன் நடைபெற்று வருகின்றது.
இங்கு கிழ்காணும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது.